டொலர் பெறுமதி அதிகரிப்பு! – தங்கத்தின் விலை குறைவு..!

டொலர் பெறுமதி அதிகரிப்பு! – தங்கத்தின் விலை குறைவு..!

உலக  சந்தையில்  தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக  சர்வதேச ஊடகங்கள்  குறிப்பிட்டுள்ளன. அமெரிக்க ரிசர்வ்  வங்கியினால்  வட்டி விகிதத்தை அதிகரிக்கும்  நோக்கிலான நடவடிக்கைகள்  காரணமாக டொலர் பெறுமதி  உயர்வடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்  அடிப்படையில்,  உலக  சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த  நிலையில், ஒரு அவுன்ஸ்  தங்கத்தின்  விலை 2 தசம் 5 வீதத்தினால்  குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு அவுன்ஸ்  தங்கத்தின்  விலை ஆயிரத்து 785 தசம் 71 ஆக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த  வருடத்தில்  தங்கத்திற்கான கேள்வி அதிகரிக்கும்  நிலையில், அதன்  விலை சீராகுமெனவும்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.