அளவுக்கு அதிகமாக தூங்கினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் பாருங்க...!

அளவுக்கு அதிகமாக தூங்கினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் பாருங்க...!

பொதுவாக  தூக்கம்  ஒருவரது ஆரோக்கியமான  உடல்நலத்திற்கு தரமான  மிகவும்  இன்றியமையாதது. எவ்வளவு  தான்  தூக்கம் ஆரோக்கியமானதாக  இருந்தாலும், அளவுக்கு  அதிகமானால்,  அதனால் எதிர்விளைவுகளைத்  தான்  சந்திக்கக்கூடும்.

தற்போது அவை என்னென்ன பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து  கொள்வோம்.

●9-11  மணிநேரம்  வரை தூங்குபவர்களுக்கு  38 சதவீதம் இதய நோய் வருவதற்கான  வாய்ப்பு உள்ளது என  ஆய்வுகளில்  கூறப்பட்டுள்ளது. 

●அளவுக்கு  அதிகமாக  தூங்குபவர்கள், உடற்பயிற்சியை  அளவாக  செய்வார்கள். இப்படி  இருந்தால்,  உடல்  பருமனால் அவஸ்தைப்பட  நேரிடும். 

●எப்போது  ஒருவர்  அளவுக்கு  அதிகமாக தூங்குகிறார்களோ,  அவர்கள்  முதுகு பகுதிக்கு அ திகமான  அழுத்தம் கொடுக்கிறார்கள்  என்று  அர்த்தம். இப்படி அழுத்தம்  அதிகம்  கொடுக்கும்  போது, நாள்பட்ட  முதுகு  வலியால் அவஸ்தைப்படக்கூடும். 

●அதிகமான  தூக்கம்  இரத்த  சர்க்கரை அளவை  அதிகரிக்கும். ஆய்வு  ஒன்றில் ஒருவர் 9  மணிநேரத்திற்கு  மேல் தூங்கினால் , சர்க்கரை  நோய் வருவதற்கான   அபாயம்  6-7 மணிநேரம் தூங்குபவர்களை  விட  அதிகம் இருப்பது தெரிய   வந்தது.

●அளவுக்கு  அதிகமான  தூக்கம் மன இறுக்கத்துடன்  தொடர்பு  கொண்டுள்ளது ஆய்வில்  தெரிய  வந்துள்ளது.  எனவே அதிகம்  தூங்கி , மன  இறுக்கத்தால் அவஸ்தைப்படாதீர்கள்.