தூங்கும்போது போர்வையால் கால்களை மூடக்கூடாது! ~ ஏன் தெரியுமா?

தூங்கும்போது போர்வையால் கால்களை மூடக்கூடாது! ~ ஏன் தெரியுமா?

நம்மில் பலரும் இரவு நேரத்தில் தூங்குவதற்கு போராடுவோம். சில நேரங்களில் தூக்கமின்மை என்ற நீண்ட கால தூக்க பிரச்சனையையும் எதிர்கொள்கிறோம். இருப்பினும், இந்த தூக்க பிரச்சனையை எளிதில் சமாளிப்பதற்கு வித்தியாசமான ஒரு வழி உள்ளது. அது என்னவென்றால் தூங்கும் போது ஒரு பாதத்தை மட்டும் போர்வைக்கு வெளியே வைத்துக் கொண்டு தூங்குவது.

ஆம், நீங்கள் சரியாகத் தான் படித்தீர்கள்!சில நேரங்களில் நாம் இரவில் நன்கு போர்த்திக் கொண்டு தூங்கி இருப்போம். ஆனால் தூங்கி எழும் போது கவனித்தால், நமது ஒரு பாதம் மட்டும் போர்வையில் இருந்து வெளியே இருப்பதை காண்போம். அது எப்படி மற்றும் எதனால் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.........

இரவு ஒரு நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கான ஒரு சிறந்த வெப்பநிலை என்றால் அது 60- 67°F ஆக இருக்கும். மேலும் நமது பாதங்கள் சரியான வெப்பநிலையில் உடலை வைத்துக் கொள்ள உதவுகின்றன. பொதுவாக தூக்கத்தைத் தூண்டுவதற்கு, நம் உடல் வெப்பநிலை வழக்கத்தை விட 1 முதல் 2 டிகிரி வரை குறைய வேண்டும். அதனால் தான் உடல் சூடாக இருக்கும் போது தூங்க போராடுகிறோம். ஆகவே உடலைக் குளிர்விப்பது முக்கியம் மற்றும் அதற்கு ஒரு பாதத்தை போர்வையில் இருந்து ஒரு அடி வெளியே நீட்டி தூங்குவது ஒரு சிறந்த வழியாக இருக்கும்.