இரவில் ஏன் நமக்கு கண் தெரிவதில்லை தெரியுமா? காரணம் இதுதான்!

இரவில் ஏன் நமக்கு கண் தெரிவதில்லை தெரியுமா? காரணம் இதுதான்!

கண் என்பது அடிப்படையில் ஒரு கண்ணாடி போன்றது. காரணம் கண்ணாடியில் பிம்பம் எதிரொளிக்கும் போதுதான் எதிரில் பொருள் ஒன்று இருப்பதை உணர முடியும். அதுபோல் வெளிச்சத்தில் ஒரு பொருள் நம் கண்ணில் பட வேண்டுமானால் அந்த பொருளுக்கு ஒளியை எதிரொளிக்கும் பண்பு நிச்சயம் தேவை. ஒருவேளை அப்பொருள் ஒளியை எதிரொளிக்கவில்லை என்றால் அது நம் கண்ணில் படாது. இரவில் பொதுவாக ஒளியைத் தானாக எதிரொளிக்கக்கூடிய பொருள் பெரும்பாலும் இல்லை. மேலும் இரவு நேரத்தில் ஒளியின் ஆதாரமாக விளங்கும் நட்சத்திரங்கள் இருந்தாலும் அவற்றால் போதுமான அளவுக்கு ஒளியை வெளியிட முடிவதில்லை. இதனால் பொருள்களால் அந்த ஒளியைப் பெற்று மீண்டும் அதை எதிரொளிக்க முடிவதில்லை. நீங்கள் கேட்டீர்கள். இரவில் ஏன் கண் தெரிவதில்லை? என்று. இரவில் கண் தெரியாது என்பதெல்லாம் இல்லை. இரவிலும் கண்கள் நன்றாக தெரியும். ஆனால் அதற்கு எதிரில் ஒளியும் ஒளியை எதிரொளிக்கும் தன்மையுடைய பொருளும் ஒரு சேர அமைவதில்லை. இவ்வாறு அமையாததால் இரவில் நம் கண்களுக்கு பொருள் தென்படுவதில்லை. மற்றுமொரு எடுத்துக்காட்டாக கூறினால், காற்றை நம்மால் உணர முடியும்.  ஆனால் அந்த காற்றுக்கு ஒளியைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலோ அல்லது அதை எதிரொளிக்கும் பண்போ இல்லை. அதனால் இறுதி வரை காற்றை உணரத்தான் முடியுமே தவிர, பார்க்க முடியாது. சில வரிகளில் கூறுவதென்றால்,

ஒளியை எதிரொளிக்கும் பொருள் மட்டுமே நம் கண்ணில்  தென்படும். ஒளியை எதிரொளிக்காத பொருள்கள் தென்படுவதில்லை. இரவில் ஒளி இல்லை என்பதால் எந்தப் பொருளுக்கும் ஒளியை எதிரொளிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அவ்வாறு எதிரொளிக்க முடியாததால் அந்த பொருள் இரவில் நம் கண்ணில் தெரிவதில்லை.  இதுபோன்ற காரணங்களால் தான் இரவில் நம் கண்களுக்கு எந்தப் பொருளும் தெரிவதில்லை.