உங்கள் கணினி மற்றும் மொபைல் போனில் YouTube வீடியோக்களை இலவசமாக download  செய்வது எப்படி?

உங்கள் கணினி மற்றும் மொபைல் போனில் YouTube வீடியோக்களை இலவசமாக download  செய்வது எப்படி?

YouTube  மிகப்பெரிய  வீடியோ  ஸ்ட்ரீமிங் தளமாக இயங்கி வருகிறது. இலவசமாகவும்,  கட்டணம் செலுத்தி பிரீமியம்  யூசராகவும்  YouTube வீடியோக்களை  பார்க்கலாம். பொழுதுபோக்கு,  இசை  மட்டுமின்றி, கல்வி, பொது அறிவு, வணிகம்  என்று பல்வேறு  விஷயங்களைத்  தெரிந்து கொள்ளும்  தளமாக  YouTube செயல்பட்டு வருகிறது. எப்போதுமே  ஓன்லைனில் பார்க்க  முடியவில்லை அல்லது  விரும்பிய வீடியோக்களின்  தொகுப்பை சேமிக்க வேண்டும் என்று  விரும்புவர்களுக்கு, வீடியோக்களை  டவுன்லோடு செய்து ஆஃப்லைனிலும்  பார்க்கும்  ஆப்ஷன் (option) உள்ளது.  நீங்கள்  கட்டணம் செலுத்தி, YouTube Premium  யூசராக இருந்தால், டவுன்லோடு  ஆப்ஷன் கிடைக்கும். ஆனாலும், டவுன்லோடு செய்யப்பட்ட  வீடியோக்கள்  உங்கள் யூடியூப்  செயலியிலேயே  தான் இருக்கும். இலவச  யூடியூப்  டவுன்லோடர்  என்ற செயலியைப்  பயன்படுத்தி, உங்கள் பிரத்யேகமான  வீடியோக்களை டவுன்லோடு  செய்து, நீங்கள்  விரும்பும் இடத்தில்  ஸ்டோர்  செய்யலாம்.

உங்கள் கணினியில் YouTube வீடியோக்களை இலவசமாக download  செய்வது எப்படி?

1- உங்கள்  கணினியில் 4K Video Downloader என்ற புரோகிராமை  டவுன்லோடு செய்து, இன்ஸ்டால் செய்து  கொள்ளுங்கள்.

2- இன்ஸ்டால் செய்யப்பட்ட 4K Video Downloader ஐ திறந்து வைத்துக் கொள்ளுங்கள்.

3- web browser திறந்து, யூடியூபில் நீங்கள் விரும்பும்  வீடியோவின் URL ஐ நகல்(copy) எடுத்து, டவுன்லோடரில்  இடது மேற்புறத்தில்  பச்சை நிறத்தில்  இருக்கும் ‘paste link’ என்ற  ஐக்கானைக் கிளிக் செய்து, URL ஐ அதில்  பேஸ்ட் செய்யவும்.

4- உங்களுக்கு  வீடியோ எந்த ரிசல்யூஷனில் மற்றும்  எந்த ஃபார்மட்டில் வேண்டுமோ அதைத்  தேர்வு செய்து, டவுன்லோடு என்ற  பட்டனை கிளிக் செய்யுங்கள்.

5- உங்கள்  கணினியில் எ ந்த  இடத்தில் வீடியோ சேமிக்கப்பட  வேண்டும் என்பதைத் தேர்வு  செய்யுங்கள்.

6- ஸ்மார்ட்  மோடு என்ற ஆப்ஷன் உள்ளது. அதை கிளிக் செய்தால்,  நீங்கள் ஒவ்வொரு முறையும் நீங்கள்  என்ன ரிசல்யூஷன் மற்றும் ஃபார்மட்டில்(format) டவுன்லோடு செய்யவேண்டும்  என்று  கேட்காது. தானாகாவே, நீங்கள்  தேர்ந்தெடுத்த வடிவத்தில்  டவுன்லோடு  செய்துவிடும்.

உங்கள் Android மொபைலில் YouTube வீடியோக்களை இலவசமாக download செய்வது எப்படி?

1- ஆண்ட்ராய்டு  மொபைலில் இலவசமாக யூடியூப்  வீடியோக்களை  டவுன்லோடு செய்ய TubeMate செயலியை பயன்படுத்தலாம்.

2- கூகுள் பிளே  ஸ்டோரில்  இந்த செயலி இல்லை. எனவே,  நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்டு  சாதனத்தின் settings இல், கூகுள்  பிளேஸ்டோர்  தவிர்த்து பிற இடங்களில்  இருந்து  டவுன்லோடு செய்ய அனுமதி அளிக்க  வேண்டும்.

3- TubeMate YouTube Downloader வலைதளத்தில்  உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்துக்கான  செயலியை பதிவிறக்கவும். வேறு  எந்த அதிகாரபூர்வமற்ற  தளத்தில்  இருந்தும் நீங்கள் பாதுகாப்பற்ற  செயலியை டவுன்லோடு செய்ய  வேண்டாம். APK file ஆக டவுன்லோடு  செய்த பின், இன்ஸ்டால் செய்யுங்கள்.

4- TubeMate ஆப் யூடியூப் செயலியைப் போலவே  காட்சியளிக்கும். நீங்கள் விரும்பும்  வீடியோவை  இந்த செயலியிலேயே  தேடலாம். நீங்கள் தேடிய வீடியோ  கிடைத்தவுடன், சிவப்பு  நிறத்தில் இருக்கும்  டவுன்லோட்  பட்டனைக் கிளிக் செய்யுங்கள்.

5- அடுத்தது,  நீங்கள் விரும்பும்  ரிசல்யூஷன்  மற்றும்  ஃபார்மட்டை  தேர்வு செய்து, டவுன்லோடு  செய்யலாம். ஒரே நேரத்தில் பல வீடியோக்களை ‘queue’வில் சேர்த்து  டவுன்லோடு  செய்யலாம்.