மன்னன் இராஜராஜ சோழன் வாரிசுகள் இன்னும் இருக்கிறார்களா? அப்படியானால் எங்கே, என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்?

மன்னன் இராஜராஜ சோழன் வாரிசுகள் இன்னும் இருக்கிறார்களா? அப்படியானால் எங்கே, என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்?

ராஜராஜசோழனின் வாரிசு இன்றளவும் வாழ்வார்கள் . ஆனால் அக்னி வம்சம் என்று கூறிக் கொள்ளும் பிச்சாவாரம் பண்ணையார் குடும்பம் கண்டிப்பாக சோழர் இல்லை என்பதை மட்டும் உறுதியாக முதலில் கூறுகிறேன்.

சில மீடியாக்களில் போலியாக தாங்கள் சோழர் என்பதாகவும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பட்டாபிஷேகம் ( வருஷா வருஷம் பட்டாபிசேகம் செய்யமாட்டார்கள். அதன் பெயர் பரிவட்டம்) செய்வதாகவும் கலர் கலராக எழுதுவார்கள்.

ஆனால் தீட்சிதர்கள் யாருக்கும் பட்டாபிசேகம் செய்வதில்லை. அவர்களாகவே பரிவட்டம் கட்டி கொள்கிறார்கள். 50 வருடங்களாக சோழர்களாக மாறியுள்ள அவர்கள் அதற்கு முன் ரனதீர பல்லவர் வம்சாவளி என்று கதை அளந்தனர். அதனால் மாட்டிக் கொண்டனர்.

கோவில் வரலாற்றில் ஒரு முறைக் கூட இவர்கள் சொந்த செலவில் கும்பாபிஷேகம் செய்ததாகவோ குறைந்தபட்சம் கோவிலுக்கு கொடையளித்ததாகவோ சிறு செய்திகள் கூட கிடையாது. அக்காலத்தில் சிதம்பரத்தின் முக்கிய செல்வந்தராய் இருந்தும் திருப்பணி நற்கொடையாளர் பட்டியலில் இவரது கிடையாது. இவர்கள் தங்களை சோழர் என்று நிருபிக்க கோர்ட் படி மட்டும் ஏற மாட்டார்கள்.

தஞ்சை பெரிய கோவிலின் மரியாதை எல்லாம் கேட்க மாட்டார்கள்! முதலில் சோழர்களை வம்சாவளியைப் பற்றி இரண்டு விஷயத்தை மனதில் பதிய வையுங்கள். இவர்கள் மட்டும் சோழர்களின் வம்சாவளி.

1.சூரியகுலம்

2.காஷ்யப கோத்திரம். 

இவை இரண்டும் உள்ளவர்கள் மட்டுமே சோழர்களின் குலம். ஒருவர் அக்னி குலம் , சந்திர குலம் என்று சொல்லிவிட்டால் சோழர்கள் கிடையாது என்பது உறுதி.

அடுத்ததாக பாரத்வாஜ கோத்திரம் , ஜம்பு கோத்திரம் , துர்வாச கோத்திரம் எல்லாம் சொன்னால் அவர்களுக்கும் சோழர்களுக்கும் சம்மந்தம் இல்லை . இதற்கு தான் குலம் , கோத்திரம் உதவுகிறது. சூரிய குலத்தில் , காஷ்யப கோத்திரத்தில் வந்தவர்கள் சிபி , ஹரிசந்திரன் , செம்பியன் , ராமன் , கரிகால சோழன் எல்லாம். கரிகால சோழனின் வம்சாவழியில் நாகர் இன கலப்பில் வந்தவர் தான் பல்லவராயர்கள் .

இவர்கள் கலப்பு பல்லவருக்கு முன் காஞ்சியை ஆண்டவர்கள். பின்னர் அறந்தாங்கியை ஆட்சி செய்தவர்கள்.இன்றளவு இந்த வம்சம் இருக்கிறார்கள். இவர்கள் ராஜராஜ சோழனுக்கும் முன் சோழர் கிளையில் பிரிந்தவர்கள். ராஜராஜனின் நேரடி வாரிசுகளுக்கு வாரிசு இல்லை.

குலோத்துங்க சோழன் மகள் வழி பேரன் தான். இவரது வம்சாவளிகளை பாண்டியர்கள் முற்றிலும் துடைத்துவிட்டனர். இதற்கு பின் ஒரு சிறு குறிப்பு கூட சோழர்களின் நேரடி வாரிசுகள் பற்றி இல்லை. ராஜராஜனின் சிற்றப்பா மதுராந்தக தேவரின் வம்சாவளிகள் மூலம் எங்காவது சோழர்களின் நேரடி வாரிசுகள் இருக்கலாம் .