இந்த பிரபஞ்சத்தின் மிக கொடியவன் அவனே!

இந்த பிரபஞ்சத்தின் மிக கொடியவன் அவனே!

பிரபஞ்சத்தின் பெரிய எதிரி யார் என கேள்வி கேட்டேன் மதம், இனம்,சாதி எனும் பெயர்கள் மொழிய கேட்டிட்டேன். இதையெல்லாம் கேட்டு
வெட்கிச் சிரிக்கின்றேன்
 சகோதரர்களாய் வாழவேண்டிய எம்மை எதிரிகள் என்ற நாமமதில் இனவாதி ,மதவாதி எனும் பாகுபாட்டு போர்வைக்குள் நாமே அரசியலிற்காய் பகடுகாயான முட்டாள்தனத்தை எண்ணி வெட்கி சிரிக்கின்றேன்

இனம், மதம்,சாதி தாண்டிய ஒரு எதிரியை சொல்லிடவா! அனைவருக்கும் எதிரி அவனே
குழந்தை முதல் முதியவர் வரை யாரையும் விட்டுவைக்காமல் நாள்தோறும் துரத்திடும் பாதகன் அவனே 
 நல்லவனையும் விட்டதில்லை கெட்டவனையும் விட்டதில்லை அனைவரையும் வதைத்திடும் கொடியவனும் அவனே

இனம் ,மதம், சாதி தாண்டிய ஒரு எதிரியை சொல்லிடவா
அவன் நல்லவனை திருடனாக்குகின்றான்
ஏழைகளை யாசிக்க வைக்கின்றான் 
விவசாயியை தற்கொலைக்கு தூண்டுகின்றான் தொழிலாளியை மாடாய் உழைக்கச் செய்கின்றான் இன்னும் சொல்லில் அடங்கா அநியாயங்களை நிகழ்த்துகின்றான்
மொத்தத்தில் மனிதனை மிருகமாக மாற்றுகின்றான் .அவன் யார் தெரியுமா?

இப்பிரபஞ்சத்தின் மிகப்பெரிய எதிரி "பசி" என்ற கொடியவனே ஆவான்.