ஹிட்லர் எவ்வளவு கொடூரமானவர் தெரியுமா?

ஹிட்லர் எவ்வளவு கொடூரமானவர் தெரியுமா?

எவ்வளவு கொடூரமானவர்? யூத இனமே முற்றாக     அழிய   வேண்டும் என்ற தீவிரத்தோடு     செயற்பட்ட     அளவுக்கு கொடூரமானவர்...    யூதர்கள் மீதான வெறுப்பு     என்பது     உலகின் மிக தொன்மையான          ஒரு racism ஆக கருதப்படுகின்றது!   

முகாம்களில் சிறைப்பட்ட யூதர்கள் எலும்பும் தோலுமாக ….

யூதர்களைச் சிறை வைப்பதற்காகவும் அவர்களைக் கொடுமைப் படுத்துவதற்காகவுமென்றே யோசித்து சில பிரத்தியேகச் சிறைக்கூடங்களை ஹிட்லர் கட்டவைத்த கொடுமைக்காரர்(இவற்றை concentration camps என்பார்கள்.)  உலக சரித்திரத்தில் வேறு எந்த தேசத்திலும் எந்தக் காலத்திலும் நடந்திராத கொடுமைகள் யாவும் இந்தச் சிறைக்கூடங்களில் ஹிட்லர் காலத்தில் நடந்தேறின.

இருளைத் தவிர வேறொன்றுமில்லாத கட்டடக் காடுகள் இந்தச் சிறப்புச் சிறைக்கூடங்கள்...

காற்று கிடையாது.

தண்ணீர் கிடையாது.

உணவு கிடையாது.

இது முகாமின் வெளி வேலி…. விஷப் பூச்சிகளும்     பூரான்களும்     தேள்களும் பாம்புகளும்     சுதந்திரமாக    ஊர்ந்து செல்லும்.     விசாரணைக்   கைதிகளைப் பெரும்பாலும்      நிர்வாணமாகத்தான் வைத்திருப்பார்கள்.     கொதிக்கும் நீரில் தூக்கிப்போடுவது இங்கு சாதாரணம் நிற்கவைத்துச் சுடுவது, உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாக     வெட்டிப்    போடுவது அடிக்கடி நடப்பது

தினமும் உடலை வதைக்கும் வேலைகள்….

ஊசி கொண்டு உடம்பெங்கும் குத்திக் குத்தி ரத்தம் சொட்டச்சொட்ட தீயில் இட்டு வாட்டுவது, விஷ ஊசிகள் போடுவது, மர்ம உறுப்புகளில் தாக்குவது, வன்புணர்ச்சி கொள்வது ....... குரூரத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடுகள் அரங்கேறிய பிராந்தியம் அது.  விசாரணைக் கைதிகளை வெளியிலிருந்து யாரும் வந்து பார்க்க முடியாது. அவர்களை எப்போது நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வார்கள் என்பதையும் சொல்லமாட்டார்கள். திடீரென்று ஒரு நபர் ஒரு நாளுக்கு மேல் வீடு திரும்பாதிருந்தால், “ஆள் அவுட்” என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்..

வெறியோடு உரையாற்றும் ஹிட்லர்

யூதக்குழந்தைகள் யாரும் பள்ளிகளுக்குச் சென்று படிக்கக்கூடாது ஜெர்மனியின் எந்த அரசு அலுவலகத்திலும் யூதர்களுக்கு இனி வேலை இல்லை. தவிர, யூத மருத்துவர்கள், யூத வழக்கறிஞர்கள், யூத பொறியியல் வல்லுநர்கள் யாரையும் யாரும் வேலைக்கு வைத்துக்கொள்ளக்கூடாது  நியூரெம்பெர்க் சட்டங்கள் (Nuremberg Laws) என்று அழைக்கப்பட்ட அந்தச் சட்டப்பிரதிகள் சொல்லுவதையெல்லாம்   ஒரு வரியில் சுருக்கிச் சொல்வதென்றால், ஜெர்மனியில் யூதராக இருப்போர் அத்தனைபேரும் இரண்டாந்தரக் குடிமக்களே..ஹிட்லர் எவ்வளவு கொடூரமானவர் தெரியுமா? ஹிட்லர் எவ்வளவு கொடூரமானவர் தெரியுமா?