நடிகர் வடிவேலுவிற்கு கொரோனா தொற்று உறுதி...! மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் வடிவேலுவிற்கு கொரோனா தொற்று உறுதி...! மருத்துவமனையில் அனுமதி!

லண்டனில் இருந்து திரும்பிய நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா உறுதியாகி அவருக்கு எஸ் ஜீன் மாற்றங்கள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. அவர் தற்போது சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக அவர் லண்டனுக்கு சென்று திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் வழக்கமாக செய்யும் கொரோனா சோதனை செய்யப்பட்டு இருக்கிறது. அதில் அவருக்கு பாசிடிட்டிவ் என வந்த நிலையில் தான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிராத்தித்து வருகின்றனர்.