இந்திய திரை உலகின் பிரபலம் கமல் ஹாசனுக்கு கோவிட் தொற்று உறுதி

இந்திய திரை உலகின் பிரபலம் கமல் ஹாசனுக்கு கோவிட் தொற்று உறுதி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து அவர் சென்னை போரூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் இலேசான இருமல் இருந்ததாக தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நோய் தொற்று நீங்க வில்லை என்பதை கருத்திற் கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு தெரிவித்துள்ளார்