இன்றைய ராசி பலன்கள் 06/03/2022

இன்றைய ராசி பலன்கள் 06/03/2022

ராசிபலன்கள்

06/03/2022 ஞாயிற்றுக்கிழமை

மேஷம்

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மேன்மையான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
---------------------------------------
ரிஷபம்

வியாபார பணிகளில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். உறவினர்களின் வருகையால் அலைச்சலும், விரயங்களும் உண்டாகும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 
--------------------------------------
மிதுனம்

நெருக்கமானவர்களிடத்தில் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். உத்தியோக பணிகளில் உங்களின் மீதான மதிப்பு அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். மனதில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நீங்கி அமைதி பிறக்கும். உற்சாகமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
---------------------------------------
கடகம்

வியாபார பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய துறை சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 
---------------------------------------
சிம்மம்

சமூக பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். அறிவியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உலக அனுபவங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். அரவணைப்பு அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
---------------------------------------
கன்னி

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. வாகன பயணங்களில் நிதானத்துடன் செயல்படவும். மற்றவர்களின் செயல்பாடுகளை பற்றிய கருத்துக்கள் கூறுவதில் கவனம் வேண்டும். இன்முகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
---------------------------------------
துலாம்

புதிய முயற்சிகளில் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோக ரீதியான வெளிவட்டார நட்பு அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
--------------------------------------

விருச்சிகம்

எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 
---------------------------------------
தனுசு

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் செய்யப்பட்ட மாற்றங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
---------------------------------------
மகரம்

தாயின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் வெற்றிக்கான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். கூட்டாளிகளிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். மாணவர்களுக்கு உயர் கல்வி சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். கவலைகள் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
---------------------------------------
கும்பம்

குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும். வியாபாரம் நிமிர்த்தமான திட்டங்கள் நிறைவேறும். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புத்துணர்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
---------------------------------------
மீனம்

விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சமூக பணிகளில் செல்வாக்கு மேம்படும். தனவரவில் இருந்துவந்த தடைகள் குறையும். எதிர்பாராத சில முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு  

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்