இன்றைய ராசி பலன்கள் 28/01/2022

இன்றைய ராசி பலன்கள் 28/01/2022

ராசிபலன்கள்

28-01-2022 வெள்ளிக்கிழமை


மேஷம்

செய்யும் செயல்களில் தடை, தாமதங்கள் உண்டாகும். தொழிலில் முதலீடு செய்யும் போது சற்று சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். பிரிந்து சென்றவர்களை பற்றிய சிந்தனைகள் மனதில் தோன்றும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும்.  விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
---------------------------------------
ரிஷபம்

சுபகாரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மைக்கான சூழ்நிலைகள் உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.  அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
---------------------------------------
மிதுனம்

நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். மனை தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். தவறிப்போன சில பொருட்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும்.  திருப்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
---------------------------------------
கடகம்

எந்த காரியத்தையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்துக்கள் விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பயணங்கள் சாதகமாகும்.  விருப்பம் நிறைவேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
---------------------------------------
சிம்மம்

கல்வி சார்ந்த பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வாக்கு சாதுரியத்தின் மூலம் கீர்த்தி அடைவீர்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் ஒற்றுமையான சூழ்நிலையும், தனவரவுகளும் உண்டாகும்.  தடைகள் அகலும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
---------------------------------------
கன்னி

எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். காது தொடர்பான உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். சொத்துப் பிரிவினைகளில் சாதகமான முடிவு கிடைக்கும்.  உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.  செல்வாக்கு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
---------------------------------------
துலாம்

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேம்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும்.  நன்மை நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
---------------------------------------
விருச்சிகம்

எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்பட்டாலும், அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். உயர்கல்வி தொடர்பான பணிகளில் எண்ணிய உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்களின் மீதான பொறுப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
---------------------------------------
தனுசு

தடைபட்டு வந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். கூட்டாளிகளிடம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.  ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
---------------------------------------

மகரம்

உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வங்கி கணக்கில் சேமிப்புகள் அதிகரிக்கும். மனதில் இருக்கும் கவலை நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பிரிந்து சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும்.  வரவுகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
---------------------------------------
கும்பம்

பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். பயணம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். எந்தவொரு செயலிலும் முன்கோபம் இன்றி விவேகத்துடன் செயல்பட்டால் முன்னேற்றத்தையும், லாபத்தையும் அடைய முடியும். உத்தியோகம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது.  திறமைகள் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
---------------------------------------
மீனம்

நண்பர்களுடன் கலந்துரையாடி மனம் மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்களும், மகிழ்ச்சியான தருணங்களும் அமையும். சிறு தொழில் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.  பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை