இன்றைய ராசி பலன்கள் 26/01/2022

இன்றைய ராசி பலன்கள் 26/01/2022

ராசிபலன்கள்

26-01-2022 புதன்கிழமை


மேஷம்

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். கனிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
--------------------------------------
ரிஷபம்

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த சிக்கல்கள் படிப்படியாக குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
--------------------------------------
மிதுனம்

புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உத்தியோக பணிகளில் ஆதரவு கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வமும், ஈடுபாடும் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
---------------------------------------
கடகம்

நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். காப்பீட்டு சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். சோர்வு அகலும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
---------------------------------------
சிம்மம்

குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வர்த்தகம் சார்ந்த துறைகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
--------------------------------------
கன்னி

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் பலரின் நம்பிக்கையை பெறுவீர்கள். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
---------------------------------------
துலாம்

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தயக்க உணர்வை குறைத்துக் கொள்வதன் மூலம் வெற்றி வாகை சூடுவீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் இழுபறியான சில விஷயங்களுக்கு தீர்வு காண்பீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 9 

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
--------------------------------------
விருச்சிகம்

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிந்து கொள்வீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தும். மனை மற்றும் வீடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத தனவரவு உண்டாகும்.  மகிழ்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
---------------------------------------
தனுசு

தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய மனை மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். மனதை உறுத்திய சில விஷயங்களில் தெளிவும், புரிதலும் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
---------------------------------------

மகரம்

உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வருவாயை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
--------------------------------------
கும்பம்

மனதில் இருந்துவந்த சோர்வுகள் படிப்படியாக குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். நிர்வாக பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
--------------------------------------

மீனம்

வியாபாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு மறையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். மற்றவர் கூறும் கருத்துக்களில் பொறுமையை கடைபிடிக்கவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். மன உறுதி அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்