இன்றைய ராசி பலன்கள் 15/01/2022

இன்றைய ராசி பலன்கள் 15/01/2022

ராசிபலன்கள்

15-01-2022 சனிக்கிழமை

மேஷம்

குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் ஆதரவு கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
---------------------------------------
ரிஷபம்

எந்த செயலிலும் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். கவனக்குறைவினால் எதிர்பாராத சில பிரச்சனைகள் ஏற்படலாம். வியாபாரம் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  விருப்பம் நிறைவேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 
---------------------------------------
மிதுனம்

பழைய கடன்கள் வசூலாகி திருப்தியை அளிக்கும். பிள்ளைகளின் வழியில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் தேவை. மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.  ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
---------------------------------------
கடகம்

பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் அமையும். உடன்பிறப்புகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். செய்தொழில் புரிவோருக்கு வெளியூர் தொடர்புகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும்.  ஓய்வு நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
---------------------------------------
சிம்மம்

பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அரசு துறையை சார்ந்தவர்களால் நன்மை உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் வெற்றி வாய்ப்புகள் அமையும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மனைகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும்.  சிந்தனைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
---------------------------------------
கன்னி

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சகோதரர் வகையில் நன்மைகள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உத்தியோக பணிகளில் திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள்.  சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
---------------------------------------
துலாம்

ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில், வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்துவந்த  இன்னல்கள் நீங்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் அதிகரிக்கும்.  தாமதம் அகலும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
---------------------------------------
விருச்சிகம்

செய்யும் செயல்களில் நிதானம் வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. முடிவுகளை எடுக்கும்போது உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. நண்பர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சிந்தனைகளில் போக்கில் மாற்றம் உண்டாகும்.   அனுபவம் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
---------------------------------------
தனுசு

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். தொழிலில் தடையாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சார்ந்த செயல்பாடுகளில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்
---------------------------------------
மகரம்

அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைப் பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  பொறுமை வேண்டிய நாள். 

அதிர்ஷ்ட  திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
---------------------------------------
கும்பம்

உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் ஈடேறும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல சாதகமான சூழல் அமையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
---------------------------------------
மீனம்

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் ஏற்படும். துணிச்சலுடன் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கால்நடைகளிடம் கவனம் வேண்டும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் ஏற்படும்.  லாபம் நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்