இன்றைய ராசி பலன்கள் 12/01/2022

இன்றைய ராசி பலன்கள் 12/01/2022

ராசிபலன்கள்

12-01-2022 புதன்கிழமை

மேஷம்

தனவரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோக பணிகளில் ஆதரவான சூழல் உண்டாகும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
---------------------------------------
ரிஷபம்

வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. மனதில் தோன்றும் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
---------------------------------------
மிதுனம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இழுபறியான சில விஷயங்களுக்கு புதிய முடிவு எடுப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் புத்துணர்ச்சி உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். சிக்கல் குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
---------------------------------------
கடகம்

உறவினர்களின் மத்தியில் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு கிடைக்கும். நெருக்கமானவர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.  வியாபாரத்தில் புதுவிதமான யூகங்களும், எண்ணங்களும் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
---------------------------------------
சிம்மம்

வியாபார பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி உறவுகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய கடன்களை தீர்ப்பதற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் காணப்படும். புதுவிதமான சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். திருப்தியான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
---------------------------------------
கன்னி

உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களிடம் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வாகனப் பயணங்களில் விழிப்புணர்வு வேண்டும். எண்ணம் மற்றும் தோற்றங்களில் சிறு சிறு மாற்றங்கள் காணப்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் 
---------------------------------------
துலாம்

திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். மகிழ்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
---------------------------------------
விருச்சிகம்

நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
---------------------------------------
தனுசு

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விருத்தி உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
---------------------------------------
மகரம்

எண்ணிய சில பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரத்தில் சாதுரியமான செயல்பாடுகளின் மூலம் லாபம் அடைவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விருப்பங்கள் நிறைவேறும் நாள். 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
---------------------------------------
கும்பம்

செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மறைமுக ஆதரவு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

---------------------------------------
மீனம்

உடன்பிறந்தவர்களின் வழியில் அனுகூலம் ஏற்படும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சிறு மற்றும் குறுந்தொழில்களில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஆக்கமயமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை