Todaynewstamil

BREAKING NEWS

கனடாவில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி; அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு

0 5

கனடிய பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் அனுமதியில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச மாணவர் அனுமதி 45 வீதமாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. கனடிய பல்கலைக்கழகங்களின் தலைவர் கேப்ரியல் மில்லர் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

மாணவர் அனுமதி தொடர்பான விபரங்களை ஆய்வுக்கு உட்படுத்தியதன் பின்னர் இந்த தகவல் வெளியிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் எடுத்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

வீடமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக சர்வதேச மாணவர்களை உள்ளீர்பு செய்வதை வரையறுக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

எதிர்வரும் இரண்டு ஆண்டு கால பகுதிக்கு வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதி 35 வீதத்தினால் குறைக்கப்படும் என குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் அறிவித்திருந்தார்.

இந்த வரையறைகள் காரணமாக இந்த ஆண்டில் சர்வதேச மாணவர்களின் அனுமதி சடுதியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

கனடிய கல்லூரிகள் மற்றும் வேறும் கல்வி நிறுவனங்களில் சர்வதேச மாணவர்களின் அனுமதி மேலும் குறைவடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

Leave A Reply

Your email address will not be published.