Todaynewstamil

BREAKING NEWS

அவுஸ்திரேலியாவில் இலங்கையரின் சொகுசு கார் திருட்டு

0 12

அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு சொந்தமான அதிநவீன கார் திருடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. 

மெல்பேர்ன் Hallam பகுதியில் வைத்து GTR R34 ஸ்கைலைன் கார் இரண்டு நபர்களால் திருடப்பட்டுள்ளது. 

இந்த கார் சில பழுதுபார்ப்புகளுக்காக Hallam பகுதியில் உள்ள சேவை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கார் திருட்டு

நேற்று மாலை பழுது பார்க்கும் பணி நிறைவடைந்து, காரை சோதனையிட தயாரான போதே கார் திருடப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

காரின் திறப்பு பழுதுபார்க்கும் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், வாகனத்தின் கதவுகளின் கண்ணாடிகளை உடைத்து கார் திருடப்பட்டுள்ளது.

இலக்க தகடு இல்லாத பச்சை நிற Hyundai Getz காரில் வந்த இருவர் காரை திருடி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. 

கொள்ளையர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.