பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முயற்சிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானவை என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஆணையாளர் நாயகம் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சுதந்திரமான மற்றும் அமைதியான வாக்கெடுப்பை சகித்துக்கொள்ள முடியாத சிலர் இவ்வாறான பொய்யான அறிக்கைகளை வெளியிடுவதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பொய்யான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் ஆணையாளர் தெரித்துள்ளார்.