சீனாவில் (China) உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் மீது காரொன்று மோதி பாரிய விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தானது தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் இருக்கும் ஷூஹாய் விளையாட்டு மையம் அருகே உள்ள சாலையில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “சாலையில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் மீது குறித்த கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 35 பேர் பலியாகியுள்ளதுடன் 43 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய கார் சாரதியான பேன் என்ற 62 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், விபத்தையடுத்து குறித்த விளையாட்டு மையம் தற்காலிகமாக மூடப்பட்டதுடன் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மற்றும் குற்றவாளி சட்டத்தின்படி தண்டிக்கப்படுவர் என்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.