Todaynewstamil

BREAKING NEWS

அனுரவின் ஆட்டம் ஆரம்பம் வடக்கில் அம்பலப்படுத்தப்பட்ட மோசடிகள்…

0 33

அநுரவின் ஆட்சியில் ஊழல்கள் ஒழிக்கப்படும் என்று கூறியிருந்தார்கள். ஆனால் அது ஒழிக்கப்படுமா இல்லையா அல்லது இது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என வடக்கு மாகாண பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரின் பெற்றோரினால் இந்த சந்தேகம் முன்வைக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் நடைபெற்று முடிந்த மாகாண மட்ட நாட்டிய நாடக போட்டியில், மோசடி மூலம் தேசிய ரீதியிலான போட்டியில் முதலிடம் பெற்றமை குறித்து வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

மாகாண மட்ட ரீதியில் நடைபெற்ற நாட்டிய நாடகம் போட்டியில் எமது கல்லூரியில் இருந்து பிள்ளைகள் பங்குபற்றினார்கள். 

இந்த போட்டியானது திறந்த வயது பிரிவு என்ற வகையில் தரம் 9 தொடக்கம் 13 வரையிலான மாணவர்கள் பங்கு பற்ற முடியும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இருப்பினும் குறித்த போட்டியில் தரம் எட்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரை இணைத்து, மோசடி செய்து போட்டியில் ஈடுபட்டு, அந்த பாடசாலையானது முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.