நாடாளுமன்றம் கலைக்கப்படும் : ஜனாதிபதி அநுர தரப்பில் இருந்து வெளியான செய்தி
கூடிய விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, புதிய அமைச்சரவை தொடர்பிலும் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என்று புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.