இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha), இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திசாநாயக்கவை (Anura Kumara Dissanayake) நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (22) மாலையில் பத்தரமுல்லையில் உள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இருவருக்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இந்தியாவின் தலைமையிலிருந்து வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், அநுர குமாரவின் தேர்தல் வெற்றிக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
அத்துடன் இரு நாடுகளின் செழுமைக்காக உறவுகளை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியதாக, உயர் ஸ்தானிகர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அனுரகுமார திசாநாயக்கவுக்கு பல சர்வதேச நாடுகள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றன.