Todaynewstamil

BREAKING NEWS

கோட்டாபயவையும் விட்டு வைக்காத அநுர!

0 53

2024 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திசாநாயக்க, மொட்டு கட்சிக்கு மக்கள் வழங்கிய பெருமளவு ஆதரவை இம்முறை பெற்றுள்ளார்.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச முன்னிலை வகித்த 16 மாவட்டங்களில் ஒன்றை தவிர 15 மாவட்டங்களிலும் அநுரகுமார திஸாநாயக்க முன்னிலை வகித்துள்ளார்.

2024 ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவின் அடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் அநுரகுமார திஸாநாயக்க முன்னிலை வகித்திருந்தார்.

தேர்தல் முடிவுகள்

அதனடிப்படையில் அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், புத்தளம், கம்பஹா, கேகாலை, கண்டி, மாத்தளை, கொழும்பு, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பத்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய 15 மாவட்டங்களில் திஸாநாயக்க முதலிடத்தைப் பெற்றார்.

இதேவேளை சஜித் பிரேமதாச ஏனைய 7 மாவட்டங்களான நுவரெலியா, பதுளை, திகாமடுல்ல, மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் முன்னிலை வகித்தார்.இதனடிப்படையில் கோட்டாபயவிற்கு கடந்தமுறை ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய பெருமளவு ஆதரவு இம்முறை அநுரவிற்கு கிடைத்துள்ளது.

மேலும் 2019 தேர்தலில் சஜித் வெற்றி பெறாத பதுளை மாவட்டத்தில் இம்முறை முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.