இலங்கையில் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் அமைதியான முறையில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இடதுசாரி கொள்கைககளை கொண்ட அநுரகுமார திசாநாயக்க இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
எனினும் ஜனாதிபதி தேர்தலில் வழமைக்கு மாறாக எந்தவொரு வெற்றிக் கொண்டாடமும் நிகழவில்லை.பொதுவாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது, அந்தத் தொகுதியிலுள்ள ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி ஆரவாரம் செய்வர்.
வீதிகள் எங்கும் குப்பைகுழமாக பட்டாசு தூசுகள் மாறியிருக்கும், காற்றும் மாசுபட்டிருக்கும். வாகன நெரிசல் ஏற்பட்டிருக்கும்.
எனினும் இம்முறை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் போது எந்தவொரு இடத்திலும் பட்டாசு வெடிகள் இல்லை. பால்சோறு அன்னதானங்கள் வழங்கப்படவில்லை.
மாற்றம் ஒன்றை மேற்கொள்ளப் போவதாக ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுரவுக்கு இதுவும் வெற்றியாகவே கருதப்படுகிறது.
வெற்றியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள அவரின் ஜனாதிபதி பயணம் எவ்வாறு அமையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.