இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுணஆரச்சி (Lakshman Nipuna Arachchi) நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெலவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (22) உரையாற்றும் போதே டில்வின் சில்வா (Tilvin Silva) மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எனினும், புதிய நாடாளுமன்ற உறுப்பினரை நியமிப்பது தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் ஆணைக்குழுவே மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அநுர குமார திசாநாயக்கவுக்கு அடுத்ததாக அதிக வாக்குகளைப் பெற்றவர்களின் பட்டியில் லக்ஷ்மன் நிபுணஆரச்சி காணப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நடைபெற்று முடிந்த இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க அதி கூடிய வாக்குகளைப் பெற்று இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.