இந்த தேர்தல் இலங்கையின் வரலாற்றை மாற்றும் தேர்தலாக அமையும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2024 ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க கொழும்பு – 10 பஞ்சிகாவத்தை சாய்கோஜி சிறுவர் முன் பள்ளியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று (21) தனது வாக்கை அளித்தார்.
பஞ்சிகாவத்தை அபேசிங்கராம விகாரையில் நிறுவப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றில் மிக வலுவான திருப்புமுனை
இந்தத் தேர்தல் இலங்கையின் வரலாற்றை மாற்றும் என்று நான் நினைக்கிறேன். காலங்காலமாக, அரசாங்கங்களை அமைப்பதற்கும், அரசாங்கங்களை கவிழ்ப்பதற்கும், அரசாங்கங்களை மாற்றுவதற்கும், தலைவர்களை மாற்றுவதற்கும் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
இந்த தேர்தல் இலங்கை வரலாற்றில் மிக வலுவான திருப்புமுனை என்று நான் நினைக்கிறேன்.
அதேபோன்று வெற்றிக்குப் பிறகு அனைவரும் அமைதியாக இருக்கவும், ஜனநாயகத்தின் சிறப்பியல்பு அதுவாகும்.
எந்தவொரு நபரும் அவர்கள் விரும்பும் அரசியல் இயக்கத்திற்கு பணியாற்றலாம். அவர்கள் விரும்பும் அரசியல் இயக்கத்திற்கு வாக்களிக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையை நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.