சுயாதீன வேட்பாளர் ஒருவரின் சின்னத்துடன் கொண்ட வாக்குச் சீட்டு பொதிகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் சம்பூர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறான இரண்டு பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ஒரு பொதியின் எடை மூன்று கிலோ 325 கிராம் எனவும் மற்றைய பொதியின் எடை மூன்று கிலோ 495 கிராம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் சம்பூர் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் சந்தோஷபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பூர் சந்தோஷபுரத்தை சேர்ந்த ஒருவரிடம் சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.