முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் திடீரென இராணுவத்தினர் வீதி தடையொன்றை அமைத்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல் இன்று (21) நடைபெற்று முடிந்துள்ள நிலையில் முடிவுகள் வெளியாகி கொண்டு இருக்கும் சூழ்நிலையில் முல்லைதீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இராணுவத்தினரின் வீதி தடை ஒன்றை அமைத்துள்ளனர்.
வீதி தடை
இந்தநிலையில், இன்று இரவு குறித்த வீதி தடை பகுதியில் இராணுவத்தினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
கடந்த காலங்களில் கொரோனா மற்றும் குண்டுவெடிப்பு காலங்களில் புதுக் குடியிருப்பு நகர் பகுதியில் இராணுவத்தினர் வீதி தடை அமைத்து கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுத்திருந்த நிலையில் நீண்ட காலமாக அகற்றப்பட்டு மக்களின் இயல்பு வாழ்வு திரும்பிக் கொண்டிருக்கையில் தற்போது புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினரின் வீதி தடை கண்காணிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.