Todaynewstamil

BREAKING NEWS

ஊரடங்கு சட்டம்! தேசிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

0 23

ஊரடங்கு சட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவே அன்றி வேறு எந்த காரணங்களுக்காகவும் இருக்காதென நம்புவதாக தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம்
இதேவேளை வாக்குகளை என்னும் பணியில் எந்த தலையீடும் இருக்காத வகையில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் செயற்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது பாதுகாப்பு அதிகாரிகளின் பொறுப்பென்றும் தேசிய மக்கள் சக்தி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று இரவு 10 மணியில் இருந்து நாளை(21) காலை 06 மணிவரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.