Todaynewstamil

BREAKING NEWS

யாழில் 45 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

0 5

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக இதுவரை 45 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் அனைத்தும் வன்செயல்கள் அல்லது வன்முறைகள் அற்ற சட்ட மீறல்களாகவே பதிவாகியுள்ளன.தேர்தல் குறித்தான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்குரிய தொலைபேசி இலக்கங்கள் எம்மால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே 0766535805, 0719996002, 0212212293 என்ற தொலைபேசி இலக்கங்கள் முறைப்பாடுகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் 0718789516 என்ற வாட்ஸப் இலக்கம் ஊடாகவும் முறைப்பாடுகளை வழங்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.