விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களுக்கு Stress Buster ஆக உள்ளது.
வேலை வேலை என பிஸியாக இருக்கும் மக்கள் சிரிக்கவே மறந்துவிட்டார்கள், அவர்களுக்கான ஒரு ஷோவாக இந்த சமையல் நிகழ்ச்சி அமைந்தது. 4 சீசன்கள் ஒளிபரப்பானதை தொடர்ந்து 5வது சீசன் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.இப்போது நிகழ்ச்சி முடிவுக்கும் வந்துவிட்டது, பிரியங்கா தான் இந்த 5வது சீசன் வெற்றியாளர் என்கின்றனர்.
தற்போது சில காரணங்களால் மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்.
அவர் நிகழ்ச்சியில் இல்லாதது குறித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் தாமு கூறுகையில், மணிமேகலை போனது எங்களுக்கு Loss தான், ஷோவில் இல்லை என்பது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தம், அவங்க காமெடியை நான் ரொம்ப மிஸ் பண்றேன்.
அவங்க என் பொண்ணு மாதிரி, எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும் என கூறியுள்ளார்.