குக் வித் கோமாளி 5ம் சீசன் தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. அதற்கு காரணம் மணிமேகலை மற்றும் VJ பிரியங்கா ஆகியோரின் சண்டை தான்.
ஷோவின் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை வேலையில் அடிக்கடி குறுக்கிட்டு பிரியங்கா பேசிக்கொண்டிருந்தது தான் சண்டைக்கு காரணம் என கூறி இருந்தார் மணிமேகலை.
இரண்டு தரப்பு பற்றியும் பல்வேறு பிரபலங்கள் கருத்து கூறி வருகின்றனர்.இந்நிலையில் பிரியங்காவுக்கு ஆதரவாக தற்போது CWC கோமாளியான சுனிதா பேசி இருக்கிறார்.
“ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆகிறார் என்றால், மற்றொரு போட்டியாளர் பேச கூடாதா. எல்லோரும் தான் அவருடன் பயணித்த அனுபவம் பற்றி பேசுவார்கள். யார் வேண்டுமானாலும் பேசலாம். அது எப்படி தொகுப்பாளர் வேலை என சொல்ல முடியும்” என சுனிதா கேள்வி எழுப்பி இருக்கிறார்.