Todaynewstamil

BREAKING NEWS

திருகோணமலையில் விகாரைகளை அமைக்க திட்டமிடும் சஜித்: அலிஸாஹிர் மௌலானா கருத்து

0 2


திருகோணமலையில் தமிழ் முஸ்லிம் கிராமங்களில் சஜித் பிரேமதாச பல விகாரைகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் செயற்திட்ட அமைச்சருமான அலிஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (17.09.2024) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

ஜே.வி.பியினர் கிளர்ச்சிக்குரியவர்கள். கடந்த காலத்தில் கிளர்ச்சிகள் ஊடாக நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு சென்றவர்கள். ஆக்க பூர்வமாக எதனையும் சாதித்தவர்கள் அல்ல. அறகல போராட்டம் முடிந்தும் நாடாளுமன்றத்தை தீ வைத்து அழிக்க முற்பட்டவர்கள் என்பதுடன் நாட்டில் எத்தனையே அழிவுகளை ஏற்படுத்தியவர்கள். இவர்கள் எழுச்சிக்கு உரியவர்கள் அல்ல.

நடுநிலை தவறிய சஜித்

அதேவேளை, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அனுராதபுரம் கட்டிட ஆய்வுக்காக பௌத்த விகாரைகள் ஆலயங்களுக்கு சென்று அங்கு அதனை ஆய்வு செய்து புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட்டபோது அப்போது கலாச்சார அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாச, இந்த முஸ்லிம் மாணவர்கள் பௌத்த விடயங்களை மதிக்க தெரியாதவர்கள் உடன் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

ஆனால், அதே இடத்தில் பாக்கியா மற்றும் சந்தோஷ் எனும் இசையமைப்பாளர்கள் அங்கு குடித்துவிட்டு ஆட்டம் பாட்டம் செய்தனர். அப்போது அதனை இவரும் சோர்ந்து ரசித்தார். ஆனால், இந்த பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்தி விளக்கமறியலில் வைத்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.