Todaynewstamil

BREAKING NEWS

லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை.. யார் தெரியுமா..

0 9

லெஜண்ட் சரவணன்

பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது அறிமுக படத்திலேயே மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பையும் பெற்றார்.

இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் தனது இரண்டாவது படத்தையும் பூஜை போட்டு துவங்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கருடன் படத்தின் மூலம் 2024ஆம் ஆண்டில் மாபெரும் வெற்றியை பதிவு செய்த இயக்குனர் துரை செந்தில் குமார் இப்படத்தை இயக்குகிறார்.

லெஜண்ட் சரவணனுக்கு ஜோடி
இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெறுகிறது. இந்த நிலையில், லெஜண்ட் சரவணனுக்கு இப்படத்தில் ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பயல் ராஜ்புட் நடித்து வருகிறாராம்.

மேலும் நடிகை ஆண்ட்ரியா, நடிகர் ஷாம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக லெஜண்ட் சரவணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக வெளிநாடுகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என அவரே தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.