குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதுவரை வெற்றிகரமாக 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 5வது சீசன் இந்த ஆண்டு துவங்கியது.
குக் வித் கோமாளி 5 துவங்கிய நிலையில் முந்தைய சீசன்களை விட இதில் நகைச்சுவை பெரிதளவில் இல்லை என பரவலாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது. ஆனாலும் குரேஷி, புகழ் ஆகியோரின் பங்களிப்பு மக்களை கலகலப்பாக வைத்து கொண்டது.
மூன்று பைனலிஸ்ட்
இந்த நிலையில் இந்த வாரம் குக் வித் கோமாளி 5ல் அரைஇறுதி சுற்று நடைபெற்றது. இதில் சுஜிதா, இர்பான், பிரியங்கா மற்றும் அக்ஷய் கமல் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் ஆளாக பைனல் போட்டிக்கு தேர்வாகியுள்ளார் நடிகைஇவரை தொடர்ந்து இர்பான் மற்றும் பிரியங்கா என மூன்று பேரை இறுதி போட்டிக்கு நடுவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் வைல்ட் கார்டு சுற்றின் மூலம் இன்னும் இரன்டு நபர்களை தேர்ந்தெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.