Todaynewstamil

BREAKING NEWS

அதிகரித்துள்ள ஜனாதிபதித் தேர்தல் முறைபாடுகள்: தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

0 8


ஜனாதிபதி தேர்தல் (Sri lanka elections )தொடர்பில் 3,828 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) குறிப்பிட்டுள்ளது.

அதாவது, 2024.07.31ஆம் திகதியிலிருந்து நேற்றுவரையில் இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவற்றில் 28 முறைப்பாடுகள் வன்முறைச் செயல்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தல்
மேலும் 3,720 முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம். ஏ. எல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் காவல்துறையினருக்கு 350 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.