Todaynewstamil

BREAKING NEWS

வாழை படத்தின் மூலம் கிடைத்த லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ

0 8

தமிழ் சினிமாவில் சமூக நீதியை பேசும் படங்களை எடுப்பவர் இயக்குனர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். முதல் படம் மாபெரும் வெற்றியடைந்தது.

இதை தொடர்ந்து தனுஷுடன் கைகோர்த்து கர்ணன் எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார். இதன்பின் மாமன்னன் மற்றும் வாழை என தொடர் வெற்றி படங்களை கொடுத்து தோல்வியே கண்டிராத இயக்குனராக மாறியுள்ளார் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த வாழை வசூலில் சாதனை படைத்துள்ளது.

வாழை படத்தின் லாபம் 

இந்த நிலையில், வாழை திரைப்படத்தின் மூலம் கிடைத்த லாபம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வாழை படத்தின் மூலம் ரூ. 20 கோடி முதல் ரூ. 25 கோடி வரை லாபம் கிடைத்திருக்கலாம் என மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக பைசன் திரைப்படம் உருவாகி வருகிறார். விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், ஹீரோயினாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Leave A Reply

Your email address will not be published.