விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் மாமியார் ரோலில் நடித்து இருந்தவர் தான் பிரவீனா. வில்லத்தனமான மாமியார் ரோலில் அவர் நடித்து அசத்திஇருப்பார்.
அவர் அந்த தொடருக்கு பின் சன் டிவிக்கு சென்று இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
கேரளாவை சேர்ந்த பிரவீனா மலையாளத்தில் பல படங்களில் நடித்து இருக்கிறார். தமிழிலும் சின்ன சின்ன ரோல்களில் சில படங்களில் நடித்து இருக்கிறார்.
நடிகை பிரவீனா தற்போது மீசை வைத்து இருப்பது போல ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். சீரியலுக்காக இப்படி மாறினாரா என நெட்டிசன்கள் அவரை கேட்டு வருகின்றனர்.