நாட்டின் தற்போதைய நிலைக்கு தமது கட்சியை தவிர அனைத்து அரசியல் கட்சிகளுமே பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நிகழ்வு ஒன்றின் போது இளைஞர்களின் கேள்விகளுக்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க பதில் அளித்தபோதே இந்த கருத்துக்களை வெளியிட்டார்
அத்துடன், ஜே.வி.பி கடந்த கால ஆயுதக் கிளர்ச்சிகளில் இருந்து விலகி இருப்பது போல் பாவனை செய்து பொதுமக்களை ஏமாற்றி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் போராட்டங்கள்
இது, அவர்களின் ஒரு தவறான தந்திரோபாயமாகும். உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை வழங்கும் தவறை ஜே.வி.பி மீண்டும் செய்வதாக விமர்சித்த ஜனாதிபதி, கடந்த கால தவறுகளை ஏற்றுக்கொள்ள விரும்பாத ஒரு குழுவினரிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைப்பது புத்திசாலித்தனமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு மேலும் போராட்டங்களை எதிர்கொண்டால், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று அவர் இதன்போது எச்சரித்துள்ளார்
இதேவேளை, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான கடைசி வாய்ப்பை வழங்கியுள்ளது என்று ரணில் வலியுறுத்தியுள்ளார்.