புலம்பெயர்ந்தோர் நாய்களையும் பூனைகளையும் உண்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் விமர்சித்த விவகாரம் ஜேர்மனி வரை எதிரொலித்துள்ளது.
நாங்கள் நாய்களையும் பூனைகளையும் உண்பதில்லை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹரிஸுடனான விவாதத்தின்போது ஹெய்தி நாட்டு புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவின் Ohioவிலுள்ள Springfield என்னுமிடத்திலுள்ள வீடுகளிலிருந்து பூனைகளையும் நாய்களையும் உணவுக்காக திருடுவதற்காக கூறியிருந்தார் ட்ரம்ப்.
அத்துடன், ஜேர்மனி, புதைபடிவ எரிபொருட்களை கைவிட முயன்று தோற்றுவிட்டதாகவும் கூறியிருந்தார் ட்ரம்ப்.
ட்ரம்பின் கருத்துக்கு பதிலளித்துள்ள ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம், ஜேர்மனியின் ஆற்றல் அமைப்பு முழுமையாக செயல்படும் நிலையில் உள்ளது.
நாங்கள் நிலக்கரி மற்றும் அணு மின் நிலையங்களை மூடிவருகிறோம். 2038ஆம் ஆண்டு வாக்கில், நிலக்கரி மின்னாற்றல் முற்றிலும் முடிவுக்கு வந்துவிடும் என்றும் ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் சமூக ஊடகமான எக்ஸில் தெரிவித்துள்ளது.
கடைசியாக, நாங்களும் நாய்களையும் பூனைகளையும் உண்பதில்லை என்றும் வேடிக்கையாக ட்ரம்புக்கு பதிலளித்துள்ளது ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம்.