Todaynewstamil

BREAKING NEWS

தேர்தலின் பின்னரே அடுத்த பேச்சுவார்த்தை: ஐஎம்எப் திட்டவட்டம்

0 9

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அடுத்த மீளாய்வு நடத்தப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அதன் பேச்சாளர் ஜூலி கொசக் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அடுத்த தேர்தலில் வெற்றி பெறுபவரை இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டும் என ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

“ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகும் எங்களின் பணிகள் குறித்த விவாதங்களைத் தொடருவோம். இலங்கை வரலாற்றில் ஏற்பட்டுள்ள மோசமான நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பை வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் நோக்கமாகும்.

அத்துடன், இலங்கை நிதி நெருக்கடியில் இருந்து விடுபடவில்லை எனவும், நிதி நெருக்கடியில் இருந்து நாட்டை மீள்வதற்கு ஆதரவை வழங்குவது தனது பொறுப்பாகும்.

இருப்பினும், நிதி முன்னேற்றத்தில் இன்னும் பலவீனம் இருப்பதால் சீர்திருத்த வேகத்தைத் தக்கவைத்துக்கொள்வது அவசியமாகும்.

செப்டெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான உடன்படிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்கப்படும்.

அண்மைக் காலத்தில் இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இணக்கம் காணப்பட்ட வேலைத்திட்டத்தின் நோக்கங்களுக்கு எதிர்காலத்திலும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் வலுவாக உள்ளது. முயற்சிகள் பலனைத் தருகின்றன. பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு. பணவீக்கம் குறைகிறது. கையிருப்பு மற்றும் சர்வதேச இருப்புக்கள் அதிகரித்து வருகின்றன.

வருமானம் வலுவடைகிறது. ஆனால் இன்னும் சில அபாயங்கள் உள்ளன. எனவே, அதைத் தக்க வைத்துக்கொள்வது முக்கியம்.

முதலாவதாக, எதிர்வரும் தேர்தல் உண்மையில் இலங்கை மக்கள் தீர்மானிக்க வேண்டிய ஒன்று.

வரலாற்றில் மிக மோசமான நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு IMF திட்டத்தின் இலக்குகளை அடைவதே இலங்கையின் முன்னுரிமையாகும்.

நாடு முழுவதுமாக நெருக்கடியில் இருந்து இன்னும் விடுபடவில்லை” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.