மட்டக்களப்பு (Batticaloa) பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (12.9.2024) இரவு மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னக்குடா வீதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஏறாவூர் – தளவாய் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய அஜீத்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோட்டார் சைகிளில் பயணித்த இவர், சிறிய ரக உழவு இயந்திரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோட்டார் சைகிளில் பயணித்த இவர், சிறிய ரக உழவு இயந்திரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.