Todaynewstamil

BREAKING NEWS

தமிழரசு கட்சியினர் தமிழ் மக்களுக்கு செருப்படி – தமிழ் எம்.பி சீற்றம்

0 9

தமிழரசுக் கட்சியை நம்பிருந்த மக்களுக்கு தமிழரசு கட்சியினர் செருப்படி வழங்கியிருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (jaffna) உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று (13.9.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில் பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே (Ranil Wickramasinghe) மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும்.

தமிழரசு கட்சியின் குழப்ப நிலை

பல்வேறுபட்ட நெருக்கடியில் இருந்த நாட்டினை மீட்டு தற்போது உள்ள நிலைக்கு கொண்டு வந்தவர் ரணில் விக்ரமசிங்க அவர்களே எனவே அவருக்கே வாக்களிக்க வேண்டும்.

தமிழரசுக் கட்சியை நம்பிருந்த மக்களுக்கு தமிழரசு கட்சியினர் செருப்படி வழங்கியிருக்கிறார்கள் என்றும் அவர்கள் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாத பல்வேறு குழப்ப நிலைக்கு சென்றுள்ளார்கள்.

இதனால் ஜனாதிபதியை ஆதரிப்பது தொடர்பிலே பல்வேறு குழப்பம் இல்லை வருகிறது என்றும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரணில் விக்ரமசிங்க நாட்டிலே கடந்த ஆட்சி காலத்தில் ஏற்படுத்திய பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் தமது நிலைப்பாடு தொடர்பிலும் இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.


Leave A Reply

Your email address will not be published.