தன்னுடைய மனைவி புற்றுநோயால் இறந்தது தொடர்பாகவும், குடும்ப விடயங்கள் தொடர்பாகவும் ஆ.ராசா எம்பி உணர்ச்சி பூர்வமாக பேசியுள்ளார்.
திமுக எம்பி ஆ.ராசா பேட்டி ஒன்றில் உணர்ச்சி பூர்வமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், “வீட்டில் என்னை எல்லோரும் ராஜா என்று தான் அழைப்பார்கள். கலைஞர் கருணாநிதியும் என்னை ராஜா என்று தான் அழைப்பார்.
ஆனால், தமிழ் மீது கொண்ட பற்று காரணாமாக ராசா என்றே நான் கையெழுத்து போடுவேன். அதுவே எனக்கு அரசியலிலும் நிலைத்தது.
என்னுடைய குடும்பத்தில் நான் 8 -வது பையன். 4 அக்காக்கள், மூன்று அண்ணன்கள் இருக்கிறார்கள்.
கடந்த 1910 -ம் ஆண்டில் என்னுடைய தாத்தா குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்ற கள்ளத்தோணியில் இலங்கைக்கு சென்றார்.
அங்கு வெள்ளக்கார அகதியிடம் வேலை பார்த்து சம்பாதித்தார். பின்னர் 10 பசு மாடுகள் வாங்கினார்.
அடுத்து ஜவுளிக்கடை வைத்து டெய்லராக மாறினார். அங்குள்ள தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் இவர் தான் தையல்காரர்கள். அவருக்கு இஸ்லாமியர் ஒருவர் தான் உதவி செய்தார்.
என்னுடன் பிறந்த 7 பேரும் இலங்கையில் பிறந்தவர்கள்தான். நான் மட்டும்தான் இந்தியாவில் பிறந்தவன். என்னுடைய அப்பா 1962 -ல் தமிழ்நாட்டிற்கு திரும்பினார். நான் 1964 -ம் ஆண்டில் பிறந்தேன்.
என்னுடன் பிறந்தவர்கள் அனைவரும் அரசு அதிகாரிகள். நான் சட்டம் படித்து மத்திய அமைச்சர் அளவுக்கு உயர்ந்தேன். என் மகளும் தற்போது லண்டனில் சட்டம் படிக்கிறார். எங்கள் குடும்பத்தை இந்தளவுக்கு உயர்ந்தியது திராவிட அரசியல்தான்.
எனக்கு கடவுள் பக்தி இல்லை. என் மனைவி பக்திமான். அவருக்கு புற்றுநோய் வந்து இறந்தார். எனக்கு அப்போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியவில்லை. எனது மகள் தான் என்னை சமாதப்படுத்தினார்.
எம்பி சம்பளம் ஒன்றரை லட்சம் கிடைத்ததை வைத்து தான் 2ஜி வழக்கில் இருந்து வாதாடி வெளியில் வந்தேன்” என்றார்.