Todaynewstamil

BREAKING NEWS

எயார் கனடா பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

0 6

கனேடிய (Canada) விமான சேவை நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான எயார் கனடா (Air Canada) விமான சேவையை பயன்படுத்தும் பயணிகளுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன் போது, எதிர்வரும் வாரத்தில் எயார் கனடா விமான சேவை பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் வாரத்தில் எயார் கனடா விமான பயணிகளின் தங்களின் பயணத்தை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விமான பயணங்கள் ரத்து

இதேவேளை, நிறுவனத்தின் சில விமான பயணங்கள் ரத்து செய்யப்படவோ அல்லது காலம் தாழ்த்தப்படவோ கூடிய சாத்தியங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த தொழிற்சங்க நடவடிக்கைகளினால் விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான கட்டணத்தை மீள செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

விமான பற்றுச்சீட்டு கட்டணம்

எனினும், விமான பயணங்கள் ரத்து செய்யப்படவிருந்தால் 48 மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்படும் என்றும் எயார் கனடா விமான சேவை தெரிவித்துள்ளது.மேலும், விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டால் விமான பற்றுச்சீட்டு கட்டணம் மாத்திரமே செலுத்தப்படும் என்றும் மேலதிக எந்த வித கட்டணங்களும் செலுத்தப்படாது என்றும் எயார் கனடா அறிவித்துள்ளது.    





Leave A Reply

Your email address will not be published.