கணவரிடம் பேச முயற்சித்தேன், ஆனால் நானும் என் குழந்தைகளும் தவித்துக்கொண்டிருக்கிறோம்… ஜெயம் ரவி மனைவி பதிவு
தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் இல்லா நடிகராக வலம் வந்தவர்களில் ஒருவர் ஜெயம் ரவி.
இவரது நடிப்பில் கடைசியாக சைரன் படம் வெளியானது, ஆனால் அப்படம் சரியான வரவேற்பு பெறவில்லை.
அடுத்து அவரிடம் இருந்து ஒரு சூப்பர் டூப்பர் படத்தை ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தான் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக திடுக்கிடும் செய்தியை வெளியிட்டார்.
அதில் இருந்து அவரது விவாகரத்திற்கான காரணம் குறித்து பலரும் தங்களது விமர்சனத்தை வைத்து வந்தனர்.
ஆர்த்தி அறிக்கை
இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி திடுக்கிடும் தகவலை பகிர்ந்துள்ளார்.
முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் ஜெயம் ரவி விவாகரத்து முடிவை அறிவித்திருக்கிறார்.
பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன் என இவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.