விஜய்யின் கோட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி கோட் படம் வெளியாகி இருந்தது. தமிழகத்தில் தாண்டி எல்லா இடங்களிலும் விஜய்யின் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
ஏஜிஎஸ் நிறுவனம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ள இப்படத்திற்காக விஜய் ரூ. 200 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளாராம்.
முதல் நாளில் ரூ. 126 கோடியுடன் தொடங்கிய வசூல் வேட்டை தாறுமாறாக நடந்து வருகிறது.
யுவன் இசையமைக்க விஜய்யை தாண்டி பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் ரசிகர்களின் பேவரெட் படமாக அமைந்து வருகிறது.
கலவையான விமர்சனங்கள் வந்தது குறித்து வெங்கட் பிரபு, விமர்சனம் செய்வது அவர்கள் உரிமை, ஆனால் கதையை பற்றியும், ஜானர் குறித்தும் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என கூறியிருந்தார்.
கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான இப்படம் 6 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 312 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.