யாழ்ப்பாணத்தில் (jaffna) பாடசாலை மாணவி ஒருவர் டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (10.9.2024) கொக்குவில் – ஆடியபாதம் வீதியில் இடம்பெற்றுள்ளது.
கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 17 வயதான வினுதா விஜயகுமார் என்ற மாணவியே இதன்போது உயிரிந்துள்ளார்.
திடீர் மரண விசாரணை
கொக்குவில் (Kokkuvil), ஆடியபாதம் வீதியில் தனியார் கல்வி நிலையத்துக்குப் பயணித்த மாணவியை டிப்பர் மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.