Todaynewstamil

BREAKING NEWS

பொதுவேட்பாளரை தோற்கடிக்க நினைப்பவர்களுக்கு மணிவண்ணன் விடுத்துள்ள எச்சரிக்கை

0 7

ஜனாதிபதி தேர்தலில் சங்குச் சின்னம் தோற்கடிக்கப்பட வேண்டுமென எங்களுடைய இனத்திற்குள் இருந்து குரல் கொடுக்கின்ற அனைவருக்கும் செப்டெம்பர் 22 ஆம் திகதியிலிருந்து நாங்கள் சங்கு ஊத வேண்டும் என யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் (V. Manivannan) தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக வடமராட்சி (Vadamarachchi), மாலுசந்தி மைக்கல் விளையாட்டு மைதானத்தில் நேற்று (10) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி தமிழினத்தினுடைய வெற்றிக்காக வீரச்சங்கை ஒவ்வொருவரும் எங்களுடைய புள்ளடியினூடாக முன்வைக்க வேண்டும் என ஆணித்தரமாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.

எங்களுடைய கட்சிகளுக்குள் இருக்கின்ற சிலர் இந்த பொது வேட்பாளரை தோற்கடிக்க வேண்டடுமென கங்கணம் கட்டுகின்றார்கள். அதற்கு இந்த தமிழினம் ஒரு போதும் அனுமதிக்க கூடாது.

எங்களுக்கு வலி தந்தவர்களை நாங்கள் தோற்கடிக்க வேண்டும். விதி வெல்வதற்காக வாக்களிக்க வேண்டும். பொங்கு தமிழருக்கு இன்னல் இழைப்பவர்களுக்கு சங்காரம் நியமென்று சங்கே முழங்க வேண்டும்“  என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.