பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் டிடி கடந்த பல வருடங்களாக கால்வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது கால் முட்டியில் இதற்கு முன் மூன்று முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது.
கொஞ்சம் நேரம் தான் நிற்க முடியும் என்பதால் அவர் டிவியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதையே நிறுத்திவிட்டார்.
விருது விழாக்கள் போன்றவற்றை தொகுத்து வழங்கினாலும் அவர் அதை சேரில் அமர்ந்துகொண்டு பேசும் வகையில் தான் மேடையில் மாற்றிக்கொள்வார்.
தற்போது டிடி அவரது கால் பிரச்சனையை சரிசெய்ய முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு இருக்கிறார்.
காலில் உலோகத்தால் ஆன செயற்கையான முட்டி அவருக்கு பொருத்தப்பட்டு இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சர்ஜரி நடைபெற்றதாகவும், தற்போது தான் சரியாகி வருவதாகவும் கூறி டிடி பதிவிட்டு இருக்கிறார்.
அவர் விரைவில் குணமாக வேண்டும் என எல்லோரும் வாழ்த்தி வருகின்றனர்.